இந்திய விமானப் படை (Indian Air Force - IAF) மற்றும் பிரெஞ்சு விமானப் படை (French Air Force - FAF) ஆகியவை பிரான்சின் மாண்ட் டி மார்சனில் “கருடா - VI” என்ற இருநாட்டு விமானப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
IAF - FAF ஆகியவற்றிற்கிடையேயான கூட்டுப் பயிற்சியின் கடைசிப் பதிப்பானது 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப் படைத் தளத்தில் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜூலை 6 வரை இந்தக் கூட்டுப் பயிற்சியின் 6வது பதிப்புப் பயிற்சியானது நடைபெறுகின்றது.
இது போன்ற பயிற்சியானது விமானப் பாதுகாப்பு மற்றும் தரையில் நிகழ்த்தப்படும் தாக்குதல் திட்டங்களில் பிரெஞ்சு மற்றும் இந்தியப் படை வீரர்களின் செயல்படும் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.