TNPSC Thervupettagam

கருணைக் கொலைக்கான செயல்திட்டம்

March 14 , 2026 2 days 61 0
  • உச்ச நீதிமன்றம் (SC) முதன்முறையாக கருணைக்கொலை செயல்திட்டத்தைப் பயன்படுத்துகிறது.
  • ஹரிஷ் ராணா Vs இந்திய ஒன்றியம் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு நபரின் செயற்கை உயிர்காப்புக் கருவியை திரும்பப் பெற அனுமதித்தது.
  • நோயாளியின் நலனுக்கான கொள்கையின் அடிப்படையில் இது இருந்தது
  • அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு உணர்வற்ற நிலையில் இருக்கிறார்.
  • நோயாளியின் பெற்றோரும் இரு மருத்துவ வாரியங்களும் ஒருமனதாக குணமடைவது சாத்தியமற்றது என்று ஒப்புக் கொண்டதால், வழக்கமான 30 நாள் பரிசீலனைக் காலத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • இது மருத்துவ ரீதியாக உதவிய ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றத்தை (CANH - clinically assisted nutrition and hydration) திரும்பப் பெற அனுமதிக்கும்.
  • உச்ச நீதிமன்றம் அப்போது கருணைக் கொலை' (Passive Euthanasia) என்று அழைத்ததற்கு அதன் சொந்த 2018 அரசியலமைப்பு அமர்வு வழிகாட்டுதல்களை செயல்படுத்தியது இதுவே முதல் முறை ஆகும்.
  • கருணைக்கொலை என்பது துன்பத்தைப் போக்க ஒரு நோயாளியின் மரணத்தை விரைவுபடுத்துவதைக் குறிக்கிறது.
  • பெரும்பாலும் கருணைக்கொலை என்று குறிப்பிடப்படுகிற இது பொதுவாக ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடியாத அல்லது இறுதி துயரத்தால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நிகழ்கிறது.
  • இது பரவலாக மனிதர்களின் ஈடுபாடு கொண்டவை மற்றும் ஈடுபாடற்றவை என்ற இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
  • மனிதர்களின் ஈடுபாடற்ற கருணைக் கொலையின் கீழ், உயிரை நிலை நிறுத்தும் மருத்துவச் சிகிச்சையை நிறுத்தி வைப்பதன் மூலமோ அல்லது அதனைத் திரும்பப் பெறுவதன் மூலமோ ஒரு நோயாளி இயற்கையாக இறக்க அனுமதிக்கப்படுகிறார்.
  • எனவே, உயிரை அழித்தல் அல்லது இயற்கைக்கு மாறான வாழ்க்கையை நிறுத்துதல் என்று இதனைக் கூற முடியாது.
  • இதன் விளைவாக, இது பிரிவு 21 (வாழ்க்கை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை) மீறலாகாது என்று கருதப்படுகிறது.
  • இந்தியாவில் கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் இது சட்டப் பூர்வமானது.
  • பி. ரத்தினம் வழக்கில் (1994), உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் வாழ்வதற்கான உரிமையில் இறக்கும் உரிமையும் அடங்கும் என்று கூறியது என்பதோடு இது தற்கொலையை குற்றமற்றதாக்குகிறது.
  • ஆனால் கியான் கவுர் வழக்கில் (1996) ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிரிவு 21 இன் கீழ் வாழும் உரிமையில் இறக்கும் உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தது.
  • ஆனால் அது இயற்கைக்கு மாறான முறையில் இறப்பதற்கும் கண்ணியத்துடன் இறப்பதற்கும் இடையில் வேறுபடுத்தியது.
  • அருணா ராமச்சந்திர ஷான்பா வழக்கில் (2011), உச்ச நீதிமன்றம் கருணைக் கொலைக்கான மனுவை நிராகரித்தது, ஆனால் குணப்படுத்த முடியாத மற்றும் மீள முடியாத நோயாளிகளுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் செயலற்ற கருணைக் கொலையை அனுமதித்தது.
  • உயர் நீதிமன்ற ஒப்புதலுக்கு உட்பட்டு, இந்தியாவில் முதன்முறையாக மனித ஈடுபாடற்ற கருணைக்கொலையை உச்ச நீதிமன்றம் சட்டப் பூர்வமாக்கியது.
  • காமன்காஸ் வழக்கில் (Common cause judgment 2018) தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் அதை அங்கீகரித்து, கண்ணியத்துடன் இறக்கும் உரிமை பிரிவு 21 இன் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.
  • 2018 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஈடுபாடற்ற கருணைக்கொலை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாக இறக்கும் செயல்முறையை சீராக்க முன்கூட்டியே மருத்துவ உத்தரவுகள் அல்லது 'வாழும் உயில்கள்' வழங்கும் உரிமையை அது உறுதி செய்தது.
  • அரசியலமைப்பின் பிரிவு 21 இன் கீழ் வாழ்க்கை மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமையில் "கண்ணியத்துடன் இறக்கும் உரிமை" அடங்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 2026 ஆம் ஆண்டில், தற்போதைய வழக்கில், அதற்கான வழிகாட்டுதல்களை வகுத்து, 'வாழும் உயில்' என்ற கருத்தை அது அங்கீகரித்தது.
  • மனிதர்களின் ஈடுபாடு கொண்ட கருணைக்கொலை என்பது பொதுவாக ஆபத்தான மருந்துகளை வழங்குதன் மூலம் குணப்படுத்த முடியாத அல்லது ஆபத்தான நிலையில் உள்ள நோயாளியின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மருத்துவரின் வேண்டுமென்றே செய்யப்படும் செயலைக் குறிக்கிறது.
  • மனிதர்களின் ஈடுபாடு கொண்ட கருணைக்கொலை இந்தியாவில் சட்டவிரோதமானது.
  • உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘ஈடுபாடற்ற கருணைக்கொலை' என்பது காலாவதியான மற்றும் குழப்பமான சொல் என்ற ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை ஒப்புக் கொண்டது.
  • 'கருணைக்கொலை' என்பது மனிதர்களின் ஈடுபாடு கொண்ட கருணைக் கொலையை மட்டுமே குறிக்கும் என்பதோடு இது இப்போதும் அனுமதிக்கப்படாது.
  • 'மருத்துவ சிகிச்சையை திரும்பப் பெறுதல் அல்லது நிறுத்துதல்' என்பது ஈடுபாடற்ற கருணைக்கொலை' என்ற வார்த்தையை மாற்றும்.
  • உயிர்வாழும் தலையீடுகளை நிறுத்தி வைப்பது என்பது தொடர்ச்சியான உணர்வற்ற நிலையில் (PVS - persistent vegetative state) மயக்கமடைந்த அல்லது உணர்வற்ற நோயாளிகளின் மீதான "ஒற்றைச் செயல்" அல்லது "அவர்களைக் கைவிடுதல்" என்பதாக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
  • CANH ஐ திரும்பப் பெறும் செயல்முறை, ஒரு PVS நோயாளியின் வாழ்க்கையின் மிகவும் பாதிக்கப்படக் கூடிய கட்டத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட, வலுவான மற்றும் வெளிப்படுத்தப்பட்ட நோய்த்தடுப்பு பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
  • கண்ணியத்துடன் இறக்கும் உரிமை, தரமான நோய்த்தடுப்பு மற்றும் வாழ்க்கை முடிவு (EOL - End-of-Life) பராமரிப்பைப் பெறும் உரிமையிலிருந்து பிரிக்க முடியாதது.
  • மருத்துவச் சிகிச்சையை திரும்பப் பெற அல்லது நிறுத்துவதற்கான எந்தவொரு முடிவும் இரண்டு முதன்மை அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
  • முதலாவது, கேள்விக்குரிய தலையீடு 'மருத்துவச் சிகிச்சை' என்று தகுதி பெற வேண்டும், இரண்டாவதாக, அதை திரும்பப் பெறுவது கண்டிப்பாக நோயாளியின் "நலன் காப்பதாக" இருக்க வேண்டும்.
  • வீட்டிலேயே செய்யப்பட்டாலும் கூட, CANH ஒரு மருத்துவச் சிகிச்சையாக தகுதி பெறுகிறது என்று அது கூறியது.
  • உயிர் காக்கும் ஆதரவை திரும்பப் பெறுவது நோயாளியின் நலன் காப்பதாக உள்ளதா என்று விசாரிக்கும் போது, நல்ல மருத்துவ முடிவுகள் மற்றும் நெறிமுறைப் பரிசீலனைகள் இரண்டும் சமமாக இருப்பது முக்கியம்.
  • உயிர்காக்கும் ஆதரவை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்ய இரண்டாம் நிலை மருத்துவ வாரியங்களை அமைக்க பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்களின் குழுக்களை அமைக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இந்த நிலைமைகளில் உயிர் காக்கும் ஆதரவை திரும்பப் பெறுவதற்கு முதன்மை மற்றும் இரண்டாம் மருத்துவ வாரியங்கள் ஒருமனதாக பரிந்துரைத்தால், மருத்துவமனைகள் மூலம் முதல் வகுப்பு நீதித் துறை நீதிபதிகளுக்கு அது தெரிவிக்கப் பட வேண்டும்.
  • "மனிதர்களின் ஈடுபாடு கொண்ட" மற்றும் "ஈடுபாடற்ற" கருணைக்கொலைக்கு இடையிலான வேறுபாடு "செயல்" மற்றும் "தவிர்ப்பு" என்ற எளிமையான இருமைக்கு அப்பாற்பட்டது.
  • இதன் விளைவாக, செயலில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட வேண்டுமென்றால், அத்தகைய இழப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒரு வெளிப்படையான சட்டமன்றச் சட்டம் இருக்க வேண்டும்.

மற்ற நாடுகளில் இதன் நிலை

  • முதன்மையாக பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள் உதவியால் இறக்கும் வடிவங்களை சட்டப்பூர்வமாக்கியுள்ளன.
  • கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் 2015 முதல் உதவியுடன் இறக்கும் சட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், உதவியுடன் இறக்கும் செயல்பாடு UK நாட்டில் சட்ட விரோதமானது.
  • ஆனால் பொது மக்கள் சபை (கீழவை) " குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் (வாழ்க்கை முடிவு) மசோதா" என்ற ஒரு முக்கிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அதைச் சட்டப்பூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில், பிரான்ஸ் நாடு நோய்வாய்ப்பட்ட அல்லது மோசமாக காயமடைந்த நோயாளிகளுக்கு இறக்கும் உரிமையை அனுமதிக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்