TNPSC Thervupettagam

கரும்பிற்கு இதுவரை வழங்கப்படாத அதிகபட்ச நியாய மற்றும் இலாப விலை

August 6 , 2022 1082 days 460 0
  • கரும்பிற்கான நியாயமான மற்றும் இலாப விலைக்கு (FRP) மத்தியப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டின் கரும்புச் சாகுபடிப் பருவத்தில், குவிண்டாலுக்கு 305 ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டது.
  • 2022-23 ஆம் ஆண்டின் கரும்பு சாகுபடிப் பருவத்திற்கான நியாய மற்றும் இலாப விலை எனபது தற்போதைய 2021-22 ஆம் ஆண்டிற்கான கரும்புச் சாகுபடிப் பருவத்திற்கான நியாய மற்றும் இலாப விலையை விட 2.6 சதவீதம் அதிகமாகும்.
  • கரும்பு விவசாயிகளுக்கு உத்தரவாத விலையை உறுதி செய்வதற்காக கரும்பிற்கான நியாய மற்றும் இலாப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • கடந்த 8 ஆண்டுகளில் அரசாங்கம் நியாய மற்றும் இலாப விலையை 34% அதிகமாக உயர்த்தியுள்ளது.
  • வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரையின் பேரில் நியாய மற்றும் இலாப விலை நிர்ணயிக்கப்பட்டு, மத்தியப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் (CCEA) இந்த விலை அறிவிக்கப் படுகிறது.
  • கரும்புத் தொழில்துறையை மறுசீரமைப்பது தொடர்பான ரங்கராஜன் குழுவின் ஒரு அறிக்கையின் அடிப்படையில் நியாய மற்றும் இலாப விலை நிர்ணயிக்கப்படுகிறது.
  • தற்போதையக் கரும்புச் சாகுபடிப் பருவத்தின் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா பிரேசில் நாட்டின் உற்பத்தியை விஞ்சியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்