கர் தாக் ஒளியியல் இழைத் திட்டம்
September 24 , 2020
1784 days
726
- பிரதமர் பீகாரில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ஒளியியல் இழை இணையச் சேவைகள் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
- ஒளியியல் இழைச் சேவைகளானது “கர் தாக் ஒளியியல் இழை” என்ற திட்டத்தின் கீழ் வழங்கப் பட்டு வருகின்றது.
- இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
- இந்தத் திட்டமானது பீகாரில் 45,945 கிராமங்களை இணைக்கவுள்ளது.
- இது பீகாரின் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த வழிவகை செய்கின்றது.
Post Views:
726