ராஜ்பாத் மற்றும் மத்திய எழில்முற்ற வளாகப் பாதைகளின் பெயரை கர்தவ்ய பாதை என்று உள்ளதாக மாற்ற இந்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, ரேஸ்கோர்ஸ் சாலை என்று இருந்த, பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையின் பெயரை லோக் கல்யாண் மார்க் என்று மோடி அவர்களின் அரசு மாற்றியது.
கர்தவ்யா பாதையில், நேதாஜி சிலை முதல் இராஷ்டிரபதி பவன் வரையிலான முழு நிழற்சாலை மற்றும் இதரப் பகுதிகளும் அடங்கும்.
இந்தப் பாதையானது, ரைசினா மலையில் உள்ள இராஷ்டிரபதி பவனில் இருந்து விஜய் சௌக் மற்றும் இந்தியா கேட் வழியாக டெல்லியில் உள்ள தேசிய மைதானத்தினைச் சென்றடைகிறது.