பிரதமர் சமீபத்தில் டெல்லியில் கர்தவ்யா பவன் கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.
கர்தவ்யா பவன் என்பது மத்திய விஸ்தா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட முதல் பொதுவான மத்தியச் செயலக கட்டிடம் (CCS-3) ஆகும்.
இது உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களைக் கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான (GRIHA) நான்கு நட்சத்திர சான்றிதழைப் பெறுவதை கர்தவ்யா பவன் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டிடத்தில் இரட்டை மெருகூட்டப்பட்ட ஜன்னல்கள் மற்றும் வசித்தல் மற்றும் பகல் நேரத்திற்கான உணர்வுக் கருவிகளுடன் கூடிய LED விளக்குகள் பொருத்தப் பட்டு உள்ளன.
திறம் மிக்க அமைப்புகள் மூலம் 30 சதவீத ஆற்றல் நுகர்வைச் சேமிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்தவ்ய பவனின் மேற்கூரையில் உள்ள சூரிய ஒளி மின்னழுத்த அமைப்பு ஆனது, ஆண்டுதோறும் சுமார் 534,000 அலகு மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
தினமும் 1.1 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதுடன், இந்தக் கட்டிடம் ஆனது சுழிய அளவில் உமிழ்வு அம்சம் கொண்ட மையமாக செயல் படுகிறது.
மீண்டும் பயன்படுத்தப்படும் மறுசுழற்சி செய்யப்பட கழிவுநீரானது அக்கட்டிடத்தின் மொத்த நீர்த் தேவையில் 60 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.
திடக்கழிவு மேலாண்மையானது 1,000 கிலோகிராம் அளவிலான கரிமக் கழிவுகளை தினசரி அடிப்படையில் உரமாக மாற்றுகிறது.