TNPSC Thervupettagam

கர்தார்பூர் சாஹிப் ஒப்பந்தம்

July 16 , 2019 2127 days 759 0
  • கர்தார்பூர் சாஹிப்பின் குருத்வாராவிற்கு இந்தியப் புனிதப் பயணிகள் ஒரு ஆண்டு காலத்திற்கு நுழைவு இசைவு இல்லாமல் சென்று வர பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் வாகாவில் நடைபெற்ற 2வது முறைசார் சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்டது.
  • ஆண்டு முழுவதும், கர்தார் சாகிப்பிற்கு ஒரு நாளைக்கு 5000 புனிதப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
  • மதம் சார்ந்த பெருவழிப் பாதை வழியாக புனிதப் பயணிகள் பயணிப்பதற்கு அனுமதி முறைக்கான விதிமுறை ஒன்று இருக்கும்.
இது பற்றி
  • குருத்வாரா தர்பார் சாஹிப் ஆனது பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது.
  • இங்கு முதலாவது சீக்கிய குருவான (நானக் தேவ்) சீக்கிய சமூகத்தை ஒன்றாக இணைத்தார். 1539 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை, ஏறத்தாழ 18 ஆண்டுகள் அவர் இங்கு வாழ்ந்தார்.
  • மேலும் குருநானக் இறந்த பின் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமும் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்