மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், சென்ட்ரல் விஸ்டா (எழில் முற்றம்) மறுவடிவமைப்புப் பகுதியை 'கர்த்தவ்ய பவன் வளாகம்' அல்லது 'கர்த்தவ்ய பவன் பகுதி' என்று குறிப்பிட வேண்டும் என்று கூறினார்.
'சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரை இனி பயன்படுத்தக் கூடாது.
பல கர்த்தவ்ய பவன்கள், கர்த்தவ்ய மார்க் மற்றும் இப்பகுதியில் அமையவிருக்கும் எதிர்கால அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு வளாகமும் 'கர்த்தவ்ய பவன் பகுதி' என்றே அழைக்கப்படும்.
2022-ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்டிரபதி பவனிலிருந்து இந்தியா கேட் வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள ராஜ்பாத் சாலையை, கர்த்தவ்ய பாத் என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றினார்.
அதேபோல், பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் அமைந்துள்ள புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்தம்' எனப் பெயரிடப்பட்டது.