கர்நாடக சமூகப் புறக்கணிப்பு (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) மசோதா, 2025 ஆனது, தனி நபர்கள், குடும்பங்கள் அல்லது குழுக்கள் மீது விதிக்கப்படும் சமூகப் புறக்கணிப்பு நடைமுறைகளை குற்றமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சாதிப் பஞ்சாயத்துகள் மற்றும் முறைசாராத சமூக அமைப்புகளால் செயல் படுத்தப்படும் புறக்கணிப்புகளை உள்ளடக்கியது.
சமூகப் புறக்கணிப்பை விதிக்கும், வழி நடத்தும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்.
இதற்கான தண்டனையில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அமலாக்கத்தை உறுதி செய்வதற்கும் ஒரு சமூகப் புறக்கணிப்புத் தடை அதிகாரியை நியமிப்பதற்கு இந்த மசோதாவானது விதிமுறையை வழங்குகிறது.