கர்நாடக மாநிலத் தகவல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள்
October 24 , 2019 2035 days 687 0
கர்நாடகாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒன்பது தகவல் ஆணையர்கள் அம்மாநில தலைமை தகவல் ஆணையரான என் சி சீனிவாஸுக்கு எதிராக கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இக்கடிதமானது அம்மாநில தலைமைத் தகவல் ஆணையரின் “தவறான நடத்தை” மற்றும் தலைமை தகவல் ஆணையராக “அவரது இயலாமை” ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.
ஒரு அரசாணையின் மூலம் கர்நாடக தகவல் ஆணையமானது மாநில அரசால் அமைக்கப் பட்டு இருக்கின்றது.
இந்த மாநில தகவல் ஆணையமானது ஒரு மாநில தலைமை தகவல் ஆணையர் (State Chief Information Commissioner - SCIC) மற்றும் ஆளுநரால் நியமிக்கப்படும் 10க்கும் மேற்படாத மாநிலத் தகவல் ஆணையர்கள் (State Information Commissioners - SIC) ஆகியோரைக் கொண்டிருக்கும்.
தகவல் உரிமைச் சட்டம், 2005 ஆனது மாநில அளவில் ஒரு மாநிலத் தகவல் ஆணையத்தை உருவாக்க வழிவகுக்கின்றது.