கர்நாடகா அரசு தங்க ரத ரயிலை ரத்து செய்துள்ளது
August 31 , 2019
2088 days
743
- தென்னிந்தியாவின் ஒரே சொகுசு ரயிலான தங்க ரத ரயிலின் இயக்கத்தை கர்நாடக மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

- அதிக வருவாய் இழப்பின் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
- இது இந்திய மாநிலங்களான கர்நாடகா, கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களை இணைக்கின்றது.
- ஹம்பியில் உள்ள வித்தலா கோவிலில் இருக்கும் கல் ரதத்தின் நினைவாக இதற்கு இப்பெயரிடப் பட்டது.
- டெக்கான் ஒடிஸியுடன் சேர்ந்து இந்த ரயிலானது மிகவும் பிரபல ரயிலான சக்கரங்களின் மீது அமைந்த அரண்மனை என்ற ரயிலின் வரிசையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
Post Views:
743