TNPSC Thervupettagam

கர்நாடகாவின் குவாண்டம் தொழில்நுட்ப நகரத்திற்கான வரைபடம்

December 2 , 2025 10 days 44 0
  • 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் (2025) இந்தியாவின் முதல் குவாண்டம் தொழில்நுட்ப நகரத்திற்கான (Q-City) வரைபடத்தினை கர்நாடக மாநிலம் வெளியிட்டது.
  • சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான குவாண்டம் திட்டத்தின் கீழ் கர்நாடகாவின் ஹெசரகட்டாவில் இந்தக் குவாண்டம் தொழில்நுட்ப நகரம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் குவாண்டம் ஆராய்ச்சி, புதுமை மற்றும் வணிகமயமாக்கலை ஊக்குவிப்பதை குவாண்டம் தொழில்நுட்ப நகரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதில் ஆராய்ச்சி ஆய்வகங்கள், குவாண்டம் வன்பொருள் பூங்கா, கிரையோஜெனிக் சோதனை அலகுகள் மற்றும் குவாண்டம் மேகக் கணினி/தரவு மையங்கள் ஆகியவை அடங்கும்.
  • குவாண்டம் சில்லுகளின் உற்பத்திக்காக பெங்களூருவில் 1,136 கோடி ரூபாய் மதிப்பிலான குவாண்டம் மேம்பாட்டு மையத்தையும் கர்நாடகா அமைக்க உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்