TNPSC Thervupettagam

கர்நாடகாவின் நிதிச் சீர்திருத்தம்

February 10 , 2026 2 days 41 0
  • கர்நாடகாவின் 2014ஆம் ஆண்டு நிதிச் சீர்திருத்தத்தை மற்ற இந்திய மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக உலக வங்கி எடுத்துரைத்தது.
  • கர்நாடக மாநிலம், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) மற்றும் சிறப்பு நோக்கச் செயல்பாட்டு அமைப்புகளின் (SPV) கடன்களை மாநிலத்தின் கடன்களில் சேர்த்தது.
  • இந்த நடவடிக்கை நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியதுடன் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களைக் குறைத்தது, மேலும் வரவு செலவுத் திட்ட ஒழுங்கை வலுப்படுத்தியது.
  • வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன் வாங்குதல் என்பது ஒரு கவலை அளிக்கும் செயல்பாடாகும் ஏனெனில் இது உண்மையான கடனை மறைத்து, பல மாநிலங்களில் நிதிக் கட்டுப்பாட்டைப் பலவீனப்படுத்துகிறது.
  • வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களுக்காக, ஒரு தரப்படுத்தப்பட்ட அறிக்கை கட்டமைப்பு ஒன்றை உலக வங்கி பரிந்துரைத்தது என்பதோடு மேலும் இந்த அமைப்பு இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்