கர்ப்பப் பை கழுத்துப் புற்றுநோய் ஒழிப்பைத் துரிதப் படுத்துவதற்கு வேண்டிய ஒரு உலகளாவிய உத்தி
November 23 , 2020 1817 days 657 0
2020 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று நடத்தப்பட்ட 73வது உலக சுகாதார சபைக் கூட்டத்தின் போது, உலக சுகாதார அமைப்பானது (WHO - World Health Organization)இந்த அறிக்கையை வெளியிட்டது.
இது 2050 ஆம் ஆண்டில் புதிய பாதிப்புகளில் 40% என்ற அளவிற்குப் பாதிப்புகள் ஏற்படுவதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதன்முறையாக WHO ஆனது உலகளவில் கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோயை ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது.
உலகில் உள்ள பெண்களிடையே ஏற்படும் 4வது மிகப் பொதுவான ஒரு புற்றுநோய் இதுவாகும்.
உலக கர்ப்பப் பை கழுத்துப் புற்றுநோய் இறப்புகளின் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கின்றது.