கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் – ஜனவரி
January 20 , 2024 706 days 365 0
உலகளாவிய சுகாதார நலம் சார்ந்த நிகழ்வு ஆனது, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதும் அனுசரிக்கப் படுகிற நிலையில் இது உலகளவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கற்றல். தடுத்தல். கண்டறிதல்" என்பது ஆகும்.
2020 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்புகள் ஆனது, 6,04,000 புதிய பாதிப்புகள் மற்றும் 3,42,000 உயிரிழப்புகள் என மதிப்பிடப் பட்டு உள்ளது.
2020 ஆம் ஆண்டில், சுமார் 90% புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பதிவாகியுள்ளன.