கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி பிரச்சாரம்
January 22 , 2024 574 days 345 0
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான ஒரு குறிப்பிடத் தக்க படிநிலையாக, 9 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி வழங்கும் பிரச்சாரத்தினை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளது.
இந்த நோய்த்தடுப்பு பிரச்சாரமானது, மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.25 லட்சம் புதிய பாதிப்புகள் மற்றும் 75,000 உயிரிழப்புகள் பதிவாகின்றன.
மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக, இந்தியாவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படக் கூடியப் புற்றுநோயாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளது.
இந்தியாவில் காணப்படும் 83 சதவீத பரவக் கூடிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளுக்கு HPV 16 அல்லது 18 காரணமாக உள்ளன.