கர்ப்பிணி (GARBH-INi) முன்கூட்டிய பிறப்பு கணிப்புக்கான முன்னெடுப்பு
March 30 , 2026 11 hrs 0 min 58 0
மேம்பட்ட ஆராய்ச்சி முறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளைத் தடுக்கவும் கணிக்கவும் இந்திய அரசு கர்ப்பிணி (GARBH-INi) திட்டத்தைப் பயன்படுத்துகிறது.
கர்ப்பிணி (GARBH-INi - பிறப்பு விளைவுகள் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சிக்கான பல் துறைசார் குழு) என்பது இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் (DBT) கீழ் உள்ள ஒரு முதன்மைத் திட்டமாகும்.
உலகிலேயே முன்கூட்டிய பிறப்புகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும்.
இது பிறந்த குழந்தை இறப்பு மற்றும் நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.
இந்தத் திட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கர்ப்பகால ஆய்வகளைக் கொண்டு இருப்பதுடன், இதில் சுமார் 12,000 கர்ப்பிணிப் பெண்கள் ஆரம்பகால இடர் காரணிகளைக் கண்டறிய கண்காணிக்கப்படுகிறார்கள்.
துல்லியமான கணிப்புக்காக இது செயற்கை நுண்ணறிவு (AI), மருத்துவ தொற்று நோயியல் மற்றும் பன்முக ஓமிக்ஸ் முறைகளான ஜெனோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் போன்றவற்றை ஒருசேரப் பயன்படுத்துகிறது.
டிஜிட்டல் தரவுப் பகிர்வு தளமான GARBH-INi-DRISHTI ஆனது, ஆராய்ச்சியாளர்கள் சிறந்த தாய்வழி சுகாதார முடிவுகளுக்காக அறிவியல் தரவுகளை அணுகவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பகிரவும் உதவுகிறது.