TNPSC Thervupettagam

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு மதிப்பீடுகள்

September 20 , 2019 2132 days 685 0
  • ஒவ்வொரு 11 விநாடிகளுக்கும் ஒருவர் அல்லது ஒவ்வொரு ஆண்டும் 2.8 மில்லியன் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறக்கின்றனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • பெரும்பாலும் தடுக்கப்படக்கூடிய காரணங்களாலேயே இந்த உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
  • இந்த இறப்பு மதிப்பீடானது யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை பிரிவு, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுமம்  ஆகிய அமைப்புகளால் வெளியிடப் படுகின்றது.
  • சமீபத்திய மதிப்பீடுகளின் படி, 2017 ஆம் ஆண்டில்
    • கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களால் ஒவ்வொரு நாளும் 800க்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தனர்.
    • புதிதாகப் பிறந்த குழந்தைகள்  28 நாட்களுக்குள்  நாளொன்றுக்கு 7,000 என்ற எண்ணிக்கையில் இறந்தனர்.
  • மகப்பேறு கால ஆரோக்கியத்தையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிர்வாழ்வையும் உறுதி செய்ய அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் பொது சமூகத்தை தனது “ஒவ்வொரு குழந்தையும் உயிர்வாழ்தல்” என்ற உலகளாவிய பிரச்சாரத்தின் மூலம் யுனிசெஃப் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்