கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு மதிப்பீடுகள்
September 20 , 2019 2145 days 690 0
ஒவ்வொரு 11 விநாடிகளுக்கும் ஒருவர் அல்லது ஒவ்வொரு ஆண்டும் 2.8 மில்லியன் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறக்கின்றனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தடுக்கப்படக்கூடிய காரணங்களாலேயே இந்த உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
இந்த இறப்பு மதிப்பீடானது யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை பிரிவு, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுமம் ஆகிய அமைப்புகளால் வெளியிடப் படுகின்றது.
சமீபத்திய மதிப்பீடுகளின் படி, 2017 ஆம் ஆண்டில்
கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களால் ஒவ்வொரு நாளும் 800க்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தனர்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் 28 நாட்களுக்குள் நாளொன்றுக்கு 7,000 என்ற எண்ணிக்கையில் இறந்தனர்.
மகப்பேறு கால ஆரோக்கியத்தையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிர்வாழ்வையும் உறுதி செய்ய அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் பொது சமூகத்தை தனது “ஒவ்வொரு குழந்தையும் உயிர்வாழ்தல்” என்ற உலகளாவிய பிரச்சாரத்தின் மூலம் யுனிசெஃப் வலியுறுத்துகிறது.