உதாண்டி-சிதாநதி புலிகள் வளங்காப்பகத்திற்குள் அமைந்துள்ள சத்தீஸ்கரின் காரியாபந்த் மாவட்டத்தில் உள்ள கர்லாஜார் கிராமம், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பல காட்டுத் தீயை திறம்பட கட்டுப்படுத்தியது.
இந்த ஆண்டு கர்லாஜரில் நான்கு முதல் ஐந்து தீ விபத்துகள் ஏற்பட்டன, இவை அனைத்தும் அந்தக் கிராமவாசிகளால் மிகவும் குறைந்தபட்ச சேதத்துடன் விரைவாக கட்டுப்படுத்தப் பட்டன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டில் 19,003 தீ விபத்துகள் பதிவானது.
காரியாபந்த் மாவட்டத்தில் 789 மற்றும் உதாண்டி-சிதாநதி புலிகள் வளங்காப்பகத்தில் 866 தீ விபத்துகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் இது மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும்.
பத்து ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டில் கர்லாஜார் கிராமம் வன உரிமைகள் சட்டத்தின் (FRA) 5 வது பிரிவின் கீழ் சமூக வன வள உரிமைகளை (CFRR) பெற்றது.
FRA சட்டத்தின் 5வது பிரிவு, வன வளங்களை நிர்வகிக்கவும், மிகவும் அழிவுகரமான நடைமுறைகளைத் தடுக்கவும், அங்குள்ள காடுகளில் வசிக்கும் பழங்குடியினரின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் கிராம சபைகளுக்கு (கிராம சபைகள்) அதிகாரம் அளிக்கிறது.
2022 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சமூக வன வள மேலாண்மைக் குழு (CFRMC), தலா 5 பேர் கொண்ட 10 குழுக்களைக் கொண்ட தெங்கப்பள்ளி ரோந்து அமைப்பு மூலம் பாதுகாப்பை அமல்படுத்துகிறது.
ஒவ்வொரு தெங்கப்பள்ளி குழுவும் மாதந்தோறும் மூன்று நாட்கள் ரோந்து சென்று சட்ட விரோத நடவடிக்கைகளைக் கண்காணித்து கிராம சபைக்கு அறிக்கைகள் அளிக்கச் செய்ன்றன.