மத்திய உள்துறை அமைச்சகமானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களின் மீதான தனது “உள்ளூர் பாதகப் பட்டியல்களைக்” கைவிட்டுள்ளது.
இது பெரும்பாலும் இந்திய வம்சாவளி மக்களின் “கறுப்புப் பட்டியல்” என்று அழைக்கப்படுகின்றது.
இந்தப் பட்டியலானது வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றது.
இந்தப் பட்டியலானது இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டு, வெளிநாடு சென்று தஞ்சம் அடைந்தவர்களின் பெயர்களைக் கொண்டிருக்கும்.
இந்தப் பட்டியலில் உள்ள மக்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தினால் நுழைவு இசைவு சேவைகள் மறுக்கப்படுகின்றன.
இந்த மாற்றத்திற்குப் பின்னர், சாதாரண இந்திய நுழைவு இசைவைப் பயன்படுத்தி 2 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமையைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.