கற்கரியாக்கமல்லாத நிலக்கரி (Noncoking coal) இறக்குமதி குறைப்பு
November 24 , 2021 1394 days 629 0
தொழில்துறைப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் அதிக வெப்பத் திறன் கொண்ட வெப்ப (அனல்) நிலக்கரி மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் குறைந்த வெப்பத் திறன் உடைய நிலக்கரி ஆகியவற்றின் இறக்குமதிகளை இந்தியா கணிசமான அளவில் குறைத்துள்ளது.
நாட்டின் நிலக்கரித் தேவைக்கும் நிலக்கரி உற்பத்திக்கும் இடையேயுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.
குறைந்த வெப்பத்திறன் உடைய கற்கரியாக்கமல்லாத நிலக்கரியானது முக்கியமாக மின் உற்பத்தி துறையில் பயன்படுத்தப்படுவதற்காக இறக்குமதி செய்யப் படுகிறது.
ஆனால் இறக்குமதி செய்யப்படும் கற்கரியாக்கமல்லாத நிலக்கரிகள் பெரும்பாலும் எஃகு உற்பத்தித் துறையில் பயன்படுத்தப் படுகிறது.