TNPSC Thervupettagam

கலபகோஸ் ராட்சத ஆமை

February 26 , 2026 17 hrs 0 min 11 0
  • சூழலியல் அமைப்பை மீட்டெடுக்க கலபகோஸ் தேசியப் பூங்காவானது 158 கலப்பின ராட்சத ஆமைகளை ஃப்ளோரியானா தீவில் வெளியிட்டது.
  • 19 ஆம் நூற்றாண்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட செலோனாய்டிஸ் நைகரின் 40–80% டிஎன்ஏவை இந்த ஆமைகள் கொண்டுள்ளன.
  • கலாபகோஸ் தீவுகள் பசிபிக் பெருங்கடலில், ஈக்வடாருக்கு மேற்கே சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன என்பதோடு மேலும் அவை எரிமலையின் செயல் பாடுகளால் உருவாக்கப்பட்டன.
  • இந்தத் தீவுகள் சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை ஊக்குவித்துடன் 1978 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகவும் அறிவிக்கப் பட்டன.
  • ராட்சத ஆமைகள் விதைகளைப் பரப்புதல், தாவரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிற உயிரினங்களுக்கு வாழ்விடங்களை உருவாக்குவதால் அவை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • செலோனாய்டிஸ் இனமானது பொதுவாக IUCN ஆல் அருகி வரும் இனமாக அல்லது மிகவும் அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்