TNPSC Thervupettagam

கலப்பின காந்த-பாய்மவியல்மானி - ஐஐடி பாட்னா

August 5 , 2026 5 days 37 0
  • பீகாரில் உள்ள ஐஐடி பாட்னாவின் அறிவியலாளர்கள், காந்தப்-பாய்மவியல் (MR) பாய்மங்கள் மற்றும் திறன்மிகு பொருள் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒரு கலப்பின காந்த-பாய்மவியல்மானியை உருவாக்கி உள்ளனர்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) ஆதரவுடன் இந்தக் கருவி உருவாக்கப் பட்டது.
  • இது, ஒருங்கிணைந்த அமுக்கம் மற்றும் வெட்டு விசை நிலைகளின் கீழ் MR பாய்மங்களின் பாய்வு, உருக்குலைவு, உராய்வு மற்றும் தேய்மானப் பண்புகளை அளவிட முடியும்.
  • MR பாய்மங்கள் என்பவை, காந்தப்புலத்திற்கு உட்படுத்தப்படும் போது பாகுத் தன்மையை மாற்றிக்கொள்ளும் திறன்மிகு பொருட்கள் ஆகும். இவை பிரேக்குகள், கிளட்சுகள், அதிர்வு உறிஞ்சிகள், தணிப்பிகள், இயக்கிகள் மற்றும் மருத்துவக் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்தத் தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் தொழில்துறை தன்னியக்கம் ஆகியவற்றில் மேம்பட்ட பயன்பாடுகளை வடிவமைக்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்