2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கான கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருதுகளை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விருது பெறுவோர்கள் பிரதமர் தலைமையில் கீழ்க்காணும் நபர்களை உள்ளடக்கிய குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - ரஞ்சன் கோகோய்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் - N. கோபாலஸ்வாமி
பாஜக தேசிய துணைத் தலைவர் - வினய் சஹாஸ்ரபுத்தே
விருதுகளைப்பெறுவோர்
2014
ராஜ்குமார் சிங்ஹாஜித் சிங்
இவர் மணிப்புரி நடனத்தில் அதிக அனுபவமுள்ளவர்
மேலும் இவர் ஆசிரியர், நடிகர் மற்றும் நடன இயக்குநர் ஆவார்.
2015
சயனௌத்
இது 1961-ல் நிறுவப்பட்ட வங்காள தேசத்தின் கலாச்சார சங்கம் ஆகும்.
வங்காள கலாச்சாரம், இசை மற்றும் இலக்கியங்களில் அமைந்த தாகூரின் படைப்புகளை உலகெங்கிலும் ஊக்குவிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
2016
ராம் வஞ்சி சுடர்
இவர் ஒரு புகழ்பெற்ற சிற்பியாவார்.
மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் அணையில் உள்ள 45 அடி உயர ‘சம்பல் நினைவுச் சின்னம்’ இவரது குறிப்பிடத் தகுந்த முதல் வேலையாகும்.
மேலும் இவர் பத்மபூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது
குருதேவ் இரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2011ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப்பட்ட இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற ஒரு விருதாகும்.
முதன்முறை 2012-ல் புகழ்பெற்ற சித்தார் கலைஞர் பண்டிட் ரவி ஷங்கருக்கும் இரண்டாம் முறை 2013-ல் ஜுபின் மேத்தாவுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.