கலாச்சாரச் சொத்துக்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – நவம்பர் 14
November 16 , 2023 682 days 275 0
யுனெஸ்கோ அமைப்பானது, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதன் 40வது பொது மாநாட்டின் போது இந்த நாளுக்கான தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டது.
இத்தகையக் குற்றம் மற்றும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளில் அதிக கவனத்தினை ஈர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கலாச்சாரச் சொத்துகளின் (1970) சட்டவிரோத இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உரிமை மாற்றம் ஆகியவற்றைத் தடை செய்தல் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த உடன்படிக்கை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் செயலூக்கமிக்க பல்வேறு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது.