குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான கலிங்க ரத்னா விருதினை வழங்கினார்.
15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த மதிப்பிற்குரிய ஒடியா கவிஞர் ஆதிகாபி சரளா தாஸின் 600வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
சரளா தாஸ் அவர்கள் பெரும்பாலும் ஒடியா இலக்கியத்தின் ஆதிகாபி (முதல் கவிஞர்) என்று குறிப்பிடப்படுகிறார்.
சரளா தாஸ் ஒடிய மகாபாரதத்தை இயற்றிய பெருமைக்குரியவர் ஆவார்.