TNPSC Thervupettagam

கலிஞ்சர் குன்று – புவிசார் பாரம்பரிய தளம்

March 21 , 2026 2 days 63 0
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தால் (GSI) கலிஞ்சர் குன்று தேசிய புவிசார் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.
  • விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள இந்தத் தளம், வெவ்வேறு புவியியல் காலங்களின் பாறை அடுக்குகள் சந்திக்கும் அரிதான எபார்ச்சியன் முரண்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
  • இது 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பந்தேல்கண்ட் கிரானைட் மற்றும் அதன் மேல் 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையான கைமூர் மணற்பாறையைக் கொண்டு உள்ளது என்ற நிலையில் இது பூமியின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
  • இயற்கைப் பாதுகாப்புக்காக மலைப்பாங்கான ஒரு நிலப்பரப்பைப் பயன்படுத்திய கலிஞ்சர் கோட்டையானது உள்ளூரில் கிடைக்கும் கற்களைப் பயன்படுத்தி கட்டப் பட்ட நிலையில் இது ஒரு வலுவான புவிசார்-கலாச்சார தொடர்பைக் காட்டுகிறது.
  • சமுத்திர மந்தன் புராணத்துடன் தொடர்புடைய நீலகண்ட மகாதேவர் கோயில் மற்றும் பௌத்த நூல்களில் உள்ள குறிப்புகள் உள்ளிட்ட வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தை இந்தத் தளம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்