TNPSC Thervupettagam

கலிலேயா கடல் நிற மாற்றம்

August 14 , 2025 2 days 37 0
  • போட்ரியோகோகஸ் பிரவுனி எனப்படும் பச்சை ஆல்கா (பாசி) இனம் காரணமாக இஸ்ரேலில் உள்ள கலிலேயா கடல் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
  • இந்த ஆல்கா சூரிய ஒளியில் ஒரு சிவப்பு நிறமியை உருவாக்குகிறது என்பதோடு இது தண்ணீரில் குவிந்து, நிற மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • பாசி பெருகும் நிகழ்வானது, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து குவிப்புடன் தொடர்புடையது.
  • இது மனிதர்களுக்குப் பாதிப்பில்லாதது என்றாலும், இந்தப் பாசிப் பெருகல் சூரிய ஒளியைத் தடுப்பதன் மூலமும் நீரில் ஆக்ஸிஜன் அளவைக் குறைப்பதன் மூலமும் நீர் வாழ் உயிரினங்களைத் தொந்தரவு செய்யலாம்.
  • நீரின் நிறம் சிவப்பாக மாறுகின்ற இதே போன்ற நிகழ்வுகள் 2022 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் சவக்கடல் பகுதியில், அதே ஆல்கா இனங்கள் காரணமாக ஏற்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்