இந்தியாவின் முதலாவது தன்னார்வ கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பதிவேடு ஆனது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப் பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில், இது ஆறு மாநிலங்களில் உள்ள 11 மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்பட்ட 74 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை குறித்த தரவுகளைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டமானது இந்தியக் கல்லீரல் மாற்று சிகிச்சை சங்கத்தினால் தொடங்கப் பட்டது.
இந்தப் பதிவகமானது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான நடைமுறைகள் மற்றும் அவற்றின் விளைவுகளின் தேசியத் தரவுகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2,000 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தியா உலகிலேயே அதிகமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் நாடு ஆகும்.