யுனெஸ்கோ அமைப்பானது, "கல்வி உரிமை: கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்" என்ற அறிக்கையை வெளியிட்டது.
கல்வி உரிமைக்கான உலகளாவிய சட்டக் கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது.
பருவநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் விரைவான தொழில்நுட்ப மாற்றத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய நவீனமயமாக்கல் தேவையாகும்.
கல்வியில் பாகுபாடு காட்டுவதற்கு எதிரான 1960 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் இருந்து, 2000 ஆம் ஆண்டில் 56% ஆக இருந்த இலவசத் தொடக்கப் பள்ளி சேவை பரவல் ஆனது இன்று 82% ஆக உயர்ந்துள்ளது.
பள்ளிப் படிப்பு நிறைவு விகிதம் 77 சதவீதத்திலிருந்து 88% ஆக உயர்ந்துள்ளது.
வளர்ச்சியடையாத நாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன், பள்ளிப்படிப்பில் பாலினச் சமத்துவ இலக்கு கிட்டத்தட்ட அடையப்பட்டுள்ளது என்பதோடு 2000 ஆம் ஆண்டில் 100 மில்லியன் மாணவர்களாக இருந்த உயர்கல்வி சேர்க்கையானது 264 மில்லியனாக அதிகரித்து உள்ளது.
முன்னேற்றம் இருந்த போதிலும், 272 மில்லியன் குழந்தைகள் முன்கூட்டியே பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறுகிறார்கள்.
762 மில்லியன் வயது வந்தவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர் (மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்) என்பதோடுமேலும் சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், பத்து வயது குழந்தைகளில் 70% வரை ஓர் எளிய வாக்கியத்தை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
பிரான்சு, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் மொராக்கோ போன்ற நாடுகள் தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதால், வயது வந்தவர்கள் மற்றும் வயதான தொழிலாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அவசியமாகும்.