TNPSC Thervupettagam

கல்வி நிறுவனங்களுக்கான மனநலக் கொள்கை

March 19 , 2026 15 hrs 0 min 63 0
  • கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு பிரத்தியேக மன நலக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மாணவர்களிடையே மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் இக்கொள்கை கவனம் செலுத்துகிறது.
  • இது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆலோசனை சேவைகள், பயிற்சி பெற்ற மனநல நிபுணர்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கப் பரிந்துரைக்கிறது.
  • மாணவர்களின் நல்வாழ்வுக்காகப் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய சூழலை உருவாக்க கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
  • மனநலம் குறித்த சமூகக் கறையைக் குறைப்பதையும், அது குறித்த வெளிப்படையான விவாதங்களை ஊக்குவிப்பதையும் இக்கொள்கை வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்