TNPSC Thervupettagam

கல்வி நிலை அறிக்கை – இந்தியா

October 8 , 2021 1387 days 612 0
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது இந்தியாவின் கல்வி நிலை அறிக்கை 2021 : ஆசிரியர்கள் இன்றி வகுப்பில்லைஎன்று தலைப்பிடப் பட்ட தனது அறிக்கையினை வெளியிட்டது.
  • உலக ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 05) இந்த அறிக்கை   வெளியிடப்பட்டது.
  • இது 3வது கல்வி நிலை அறிக்கையாகும்.
  • இந்த ஆண்டு ஆசிரியர்கள், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் கல்விஎன்ற கருத்துருவின் மீது இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 1.2 லட்சம் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் உள்ளன.
  • அதிக ஒற்றை ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகளை உடைய 3 மாநிலங்களாவன ; அருணாச்சலப் பிரதேசம் (18.22%), கோவா (16.08%) மற்றும் தெலங்கானா (15.71%) ஆகியனவாகும்.
  • வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு மற்றும் கல்வித் தகவலுக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு ஆகியவற்றின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த அறிக்கையின் தரவுகள் தயாரிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்