TNPSC Thervupettagam

கல்விக் கொள்கையின் வரைவு

June 7 , 2019 2239 days 888 0
  • இஸ்ரோவின் முன்னாள் தலைவரான Dr. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவானது தேசிய கல்விக் கொள்கையின் வரைவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியாலிடம் சமர்ப்பித்துள்ளது.
  • இக்குழுவானது கல்விக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்காக 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • தற்போதைய கல்விக் கொள்கையானது 1986 ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டுப் பின்னர் 1992 ஆம் ஆண்டு நரசிம்மராவின் ஆட்சிக் காலத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
  • இந்த கொள்கை வரைவின் பரிந்துரைகளாவன:
    • பாடத்திட்டத்தில் இந்திய அறிவுசார் அமைப்புகளை இணைத்தல்,
    • தேசியக் கல்வி ஆணையத்தை அமைத்தல்,
    • தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைத் தடுத்தல்.
  • மேலும் இந்த நிபுணர் குழுவானது ஆசிரியர்களை உருவாக்குதல் மற்றும் கல்வித் திட்டங்கள் அனைத்தையும் பெரிய அளவிலான பல்முனைப் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளுக்கு மாற்றுவதன் மூலம் ஆசிரியர் கல்வியில் மாபெரும் மாற்றத்தையும் முன்மொழிந்துள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டுமென்ற இந்தக் குழுவின் மும்மொழித் திட்ட முன்மொழிவானது தென் மாநிலங்கள் மற்றும் இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பைச சந்தித்தது.
  • பின்னர் இந்த வரைவுக் கொள்கையானது கட்டாய இந்தி விதிகளை கைவிட்டது. ஆனால் இன்னும் கட்டாய மும்மொழிக் கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
  • முன்னதாக, முன்னாள் அமைச்சரவைச் செயலாளரான TSR சுப்பிரமணியன் தலைமையிலான புதிய கல்விக் கொள்கையின் மாற்றத்திற்கான குழுவானது 2016 ஆம் ஆண்டில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்