களரிப் பயற்று மற்றும் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்
January 25 , 2025 101 days 185 0
களரிப் பயற்று கலையானது, 2023 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் போட்டிப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தக் கலை வடிவம் ஆனது இந்த ஆண்டில் ஒரு செயல்விளக்கப் போட்டி நிகழ்வாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
களரிப் பயற்றுக் கலையானது உலகின் பழமையான மற்றும் மிகவும் அறிவியல் ரீதி ஆன தற்காப்புக் கலை வடிவங்களில் ஒன்றாகும்.
கேரளாவில் தோன்றிய இந்தக் கலையானது அங்குப் பரவலாகப் பயிற்சி செய்யப் படுகிறது.
ஒன்றுக்கொன்று சற்று வேறுபடுகின்ற வடக்கு மற்றும் தெற்கு எனப்படும் இரண்டு வகையான களரிப்பயற்று கலைகள் உள்ளன.
வடக்கு வகையில், தெற்கு வகையை விட மிக அதிகமான ஆயுதங்கள் பயன்படுத்தப் படுகின்றன என்பதோடு வடக்கு களரியில் உள்ள அனைத்து உடல் இயக்கங்களும் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி என ஒரே நேர்கோட்டில் உள்ளவாறு அமைகின்றன.
இருப்பினும், தெற்கு களரியில், மக்கள் அதைப் பயிற்சி செய்யும் போது அவர்கள் எந்த திசையிலும் நகரலாம்.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஷாவ்லின் என்ற ஒரு கோவிலில் போதிதர்மர் அவர்களால் இந்தக் களரிப் பயற்றுக் கலையானது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என நம்பப் படுகிறது.