களிமண்ணைப் பயன்படுத்தி மருத்துவக் கழிவுகளை அகற்றுதல்
June 26 , 2023 697 days 376 0
குவஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, கழிவுகளில் உள்ள சில நோய்க் கிருமிகளை நடுநிலையாக்குவதற்குக் களிமண் சாந்துகளைப் பயன்படுத்தச் செய்வதற்கான ஒரு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
கயோலின் (வெண் களிமண்) களிமண்ணுடன் ஒப்பிடும் போது பெண்டோனைட்டில் வகையில் வைரஸ் சிதைவு விரைவாக இருப்பதாக பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
வைரஸை அகற்றும் திறன் ஆனது பெண்டோனைட்டின் தரம் மற்றும் களிமண் பரப்புகளில் வைரஸின் பல்லடுக்கு உறிஞ்சு திறன் ஆகியவற்றின் தரத்தைப் பொறுத்தது என்பது இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.
வைரஸ்களைக் கொண்ட உயிரி மருத்துவக் கழிவுகள் (BMW) மனித ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு, விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறிப்பிடத் தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன.