சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) ஆனது, NAMASTE திட்டத்தின் கீழ் கழிவு / குப்பைச் சேகரிப்பாளர்களின் விவரக் குறிப்பினைச் சேகரிப்பதற்கு நாடு தழுவிய அளவில் எண்ணிமச் செயலியை அறிமுகப்படுத்துகிறது.
இது 2.5 லட்சம் நபர்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கு மிகவும் முறையானதொரு அடையாளத்தையும், சமூகப் பாதுகாப்பிற்கான ஒரு அணுகலையும் வழங்குவதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் புகைப்படம் கொண்ட தொழில்முறை சார் அடையாள அட்டைகளை வழங்கச் செய்தல் மற்றும் சுகாதாரக் காப்பீடு, தனிப்பட்டப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவையும் அடங்கும்.