கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கசடுகளை உரமாகப் பயன்படுத்துதல்
May 14 , 2023 825 days 356 0
இந்தியக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) ஆனது, பெரும்பாலான கசடுகளை உரமாகப் பயன்படுத்துவதற்கு "அதிக சாத்தியக் கூறுகள்" இருப்பதைக் கண்டறிந்து உள்ளன.
வேளாண் நிலங்களில் அவற்றைத் தடையின்றிப் பயன்படுத்துவதற்கு அல்லது மிக திறன்மிக்க உயிரி எரிபொருளாக அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைச் சுத்திகரிப்பது அவசியமானதாகும்.
கங்கையில் இருந்து மாசுபட்ட நீரைச் சுத்திகரிப்பதற்காக அமைக்கப்பட்ட கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களில் காணப்படும் கசடு பற்றிய முதல் பகுப்பாய்வு மேற் கொள்ளப் பட்டது.
ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, அதைப் உலர்த்திய பிறகு பகுப்பாய்வு செய்யப்படும் பெரும்பாலான கசடுகள் B வகுப்பிற்குள் உள்ளடங்குவதாக கண்டறிந்துள்ளது.
இதில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவுகள், இந்தியாவின் உரத் தர நிர்ணய அமைப்புகளால் (உரக் கட்டுப்பாட்டு ஆணை, 2009) பரிந்துரைக்கப் பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.
இருப்பினும், சில கசடுகளில் உள்ள பொட்டாசியம் அளவானது பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவாக இருந்தது.
மொத்தக் கரிம கார்பன் அளவானது, உரக் கட்டுப்பாட்டு ஆணையின் பரிந்துரைகளை விட அதிகமாக உள்ள நிலையில், 16%க்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் நோய்க் கிருமிகளின் அளவு மற்றும் கன உலோக மாசுக் கலப்பு ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட உரத் தரத்தை விட அதிகமாக உள்ளன.
அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தரநிலைகளின்படி, சுத்திகரிக்கப் பட்ட கசடுகளை A வகுப்பு அல்லது B வகுப்பு என வகைப்படுத்தலாம்.
A வகுப்பு கசடுகளை திறந்தவெளியில் அப்புறப் படுத்தப் படுவதற்குப் பாதுகாப்பானது மற்றும் கரிம உரமாகப் பயன்பட வல்லது.
B வகுப்பு கசடானது "வரையறுக்கப்பட்ட" வேளாண் பயன்பாடுகளில் மட்டுமே மிகவும் பயன்படுத்தக் கூடியது.
இந்தியாவில் கசடுகளை A அல்லது B வகுப்பு என வகைப்படுத்துவதற்கான தரநிலைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.