கழிவுப் பொருட்களிலிருந்து ஆற்றல் பெறும் இந்தியாவின் முதல் திட்டம்
June 10 , 2019 2169 days 720 0
டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனமானது கழிவிலிருந்து ஆற்றல் பெறும் அமைப்பிலிருந்துப் பெறப்படும் மின்னாற்றலை உபயோகிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்தும் முதன்முதலான நிறுவனமாக உருவெடுத்திருக்கின்றது.
காசிப்பூரில் அமைந்துள்ள 12 மெகாவாட் திறனுடைய, கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் அமைப்பிலிருந்து டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனமானது 2 மெகாவாட் மின்சாரத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.
மேலும் இது IL&FS சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் என்ற நிறுவனத்துடன் இணைந்து அரசு – தனியார் கூட்டுப் பங்களிப்பு முறையில் நாளொன்றுக்கு 150 டன் திறனுடைய கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வசதியை ரோகிணியில் செயல்நிலைப் படுத்தியுள்ளது.