பிரதமரின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2022-23 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மற்றும் திறன் பெருக்கத்திற்கான கவச் அமைப்பின் கீழ் 2000 கி.மீ நீள இரயில்வே கட்டமைப்பானது கொண்டு வரப்படும்.
தெலுங்கானாவில் குல்லாகுடா மற்றும் சித்கிடா போன்ற ரயில்வே நிலையங்களுக்கு இடையேச் செயல்பட்டு வரும் ‘கவச்’ அமைப்பின் சோதனையை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
கவச் என்பது இரயில்கள் ஆபத்து மிக்க சிக்னல்களைக் கடக்கையில் மோதல்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இரயில் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப ஒரு இரயிலைக் கட்டுப்படுத்தத் தவறினால், ஒரு இரயிலின் நிறுத்தக் கருவி அமைப்பினைத் தானாகச் செயல்படுத்தச் செய்வதன் மூலம், கவச் அமைப்பு பொருத்தப்பட்ட இரு இரயில் எஞ்சின்களுக்கு இடையிலான மோதல்களைத் தடுக்கிறது.