TNPSC Thervupettagam
August 6 , 2025 16 days 37 0
  • டெல்லி முதல் மும்பை வரையிலான பாதையில் மதுரா முதல் கோட்டா வரையிலான பிரிவில் கவாச் 4.0 பாதுகாப்பு அமைப்பை இந்திய இரயில்வே நிர்வாகம் நிறுவியுள்ளது.
  • கவாச் 4.0 என்பது ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பினால் (RDSO) அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பாகும்.
  • இந்த அமைப்பானது இரயில் நடவடிக்கைகளில் மிக உயர்ந்த உலகளாவிய பாதுகாப்பு தரமான நான்காவது பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நிலையில் (SIL 4) வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • கவாச் 4.0, குறைந்தப் புலனாகும் / தெரிவுநிலை நிலைகளிலும் கூட, இரயில் என்ஜின் கட்டுப்பாட்டு அறையில் தானியங்கி வேக நிறுத்த அமைப்பு மற்றும் சமிக்ஞை ஒளிகளின் புலனாகும் நிலையைச் செயல்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்