TNPSC Thervupettagam
July 2 , 2026 9 hrs 0 min 14 0
  • இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் கவிஞர் புவியரசு (இயற்பெயர்: எஸ். ஜெகநாதன்) தனது 96வது வயதில் காலமானார்.
  • திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள லிங்கவநாயக்கன்புதூரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்த அவர், வானம்பாடி இலக்கிய இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராவார் என்பதுடன் மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணி ஆற்றினார்.
  • இவர் 80க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், ரவீந்திரநாத் தாகூர், ஃபியோடர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
  • காசி நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகளின் மொழிபெயர்ப்பான 'புரட்சிக்காரன்' நூலுக்காக சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதையும் (2006), அவரது 'கையொப்பம்' கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதையும் (2009) பெற்றார்.
  • இவரது குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் கையொப்பம், முக்கூடல், புரட்சிக்காரன் மற்றும் மீறல் ஆகியவை அடங்கும்; 'முக்கூடல்' நூல் தமிழக அரசின் சிறந்த புதுக் கவிதை நூலுக்கான விருதை வென்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்