TNPSC Thervupettagam

கவிதாயினி ஷிலாபட்டாரிகா

May 5 , 2023 826 days 378 0
  • பண்டார்கர் கிழக்கத்திய நாடுகள் ஆராய்ச்சி நிறுவனமானது (BORI) சமீபத்தில் கவிதாயினி ஷிலாபட்டாரிகாவின் இலக்கியப் பங்களிப்பினை பறைசாற்றுகின்ற வகையில் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளைப் பெற்றுள்ளது.
  • இவர் சாளுக்கிய ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசியின் மகள் ஆவார்.
  • சமஸ்கிருத மொழியில் பிராமி எழுத்து வடிவில் எழுதப்பட்ட 60க்கும் மேற்பட்ட சொற்றொடர்களைக் கொண்ட ஐந்து செப்புத் தகடுகளில் ஒன்றிலிருந்து இந்த ஆதாரங்கள் பெறப் பட்டுள்ளன.
  • ஷிலாபட்டாரிகா, 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இராஷ்டிரகூட ஆட்சியாளரான துருவனின் மனைவியாக தற்போதைய வரலாறுகளில் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக,  கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற ஆதாரத்தினை முன் வைப்பதன் மூலம் பாதாமி சாளுக்கியர்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினைப் பதிவு செய்து உள்ளது.
  • கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருதக் கவிஞர்-விமர்சகர் மற்றும் குர்ஜரா-பிரதிஹாராக்களின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவரான இராஜசேகர் என்பவர் இவரது நேர்த்தியான மற்றும் அழகுமிக்கப் பாடல்களுக்காக ஷிலாபட்டாரிகாவைப் பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்