கவுகாத்தியில் ஆந்தை பன்முகத்தன்மை பாதுகாப்புத் திட்டம்
November 1 , 2026 13 days 126 0
2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் போது, அசாமின் கவுகாத்தியில் எட்டு ஆந்தை இனங்களை ஓர் அறிவியல் ஆய்வு பதிவு செய்துள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட தலா ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 33 கட்டங்களில் 24 கட்டங்களில் இந்த ஆய்வு ஆந்தைகளைப் பதிவு செய்துள்ளது.
களஞ்சிய ஆந்தை மற்றும் புள்ளி ஆந்தை ஆகியவை அடிக்கடி கண்டறியப்பட்ட இனங்களாகும்.
மற்ற ஆறு இனங்கள் பழுப்பு நிறப் பருந்து ஆந்தை, பழுப்பு நிற மீன் ஆந்தை, கழுத்துப்பட்டை கொண்ட சிறு ஆந்தை, மலை சார்ந்த சிறு ஆந்தை, கீழைச் சிறு ஆந்தை மற்றும் ஆசியக் கோடு ஆந்தை ஆகும்.
இந்த எட்டு இனங்களும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்தைகள் ஸ்ட்ரிகோஃபார்ம்ஸ் வரிசையைச் சேர்ந்தவை, இதில் டைட்டோனிடே மற்றும் ஸ்ட்ரிகிடே என்ற இரண்டு வாழும் குடும்பங்கள் உள்ளன; அவை எலி பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவுகின்றன.