மிக ஆபத்தான நிலையில் உள்ள காகபோ/ஆந்தைக் கிளியினை இனப்பெருக்கம் செய்ய உதவும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை கருவூட்டல் (AI) முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளனர்.
காகபோ ஆனது உலகின் மிகப்பெரிய பறக்க இயலாத கிளியாகும் என்பதோடு இது நியூசிலாந்து நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டது.
இரவு நேரத்தில் வாழும் இந்தத் தாவரம் உண்ணும் கிளியானது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ரிமு பெர்ரி போன்ற சில பூர்வீகப் பழ வகைகள் ஏராளமாக விளையும் ஆண்டுகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறது என்பதால் காகபோ என்பது அரிதாகவே இனப் பெருக்கம் செய்கிறது.