TNPSC Thervupettagam

காங்கிரஸ் உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம்

March 11 , 2020 1986 days 666 0
  • மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களை கீழவையிலிருந்துத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளார்.
  • கௌரவ் கோகோய், டி.என். பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர். உன்னிதன், மாணிக்க தாகூர், பென்னி பெஹனன், மற்றும் குர்ஜீத் சிங் ஆஜ்லா ஆகியோர் எஞ்சி இருக்கும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
  • இவர்கள் சபை விதிகளைப் புறக்கணித்து சபாநாயகரின் மேசையிலிருந்த ஆவணங்களைப் பறித்ததன் காரணமாக மக்களவையானது இந்த  தீர்மானத்தை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்