காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) அரசாங்கமும், காங்கோ நதிக் கூட்டணியின் (Congo River Alliance) கீழ் உள்ள கிளர்ச்சிக் குழுவான மார்ச் 23 இயக்க அமைப்பும் (M23), கத்தாரின் நடுவண் சேவையுடன் தோஹாவில் கொள்கைகள் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
MONUSCO எனும் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையினால் வரவேற்கப்பட்ட இந்த ஒப்பந்தமானது, போர் நிறுத்தம் மற்றும் கூட்டு அமலாக்க நெறிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புலம்பெயர்ந்த மக்கள் தன்னார்வமாக, பாதுகாப்பாகத் திரும்பி வருவதை உறுதி செய்வதற்கும், மோதல் உண்டாவதற்கான மூலக்காரணங்களை நிவர்த்தி செய்வதற்கு உள்ளடக்கிய வகையிலான பேச்சுவார்த்தையினை ஊக்குவிப்பதற்குமான உறுதிமொழிகளை இது உள்ளடக்கியது.