காசநோய் ஆராய்ச்சி நிதி வழங்கீட்டுப் போக்குகள் 2005-2021
December 31 , 2022 1080 days 632 0
சிகிச்சைப் பணிக் குழு (TAG) மற்றும் காசநோய்ப் பரவலை நிறுத்துதல் கூட்டாண்மை என்ற அமைப்பு ஆகியவை இணைந்து 2005-2021 ஆம் காலகட்டத்திற்கான காசநோய் ஆராய்ச்சி நிதி வழங்கீட்டுப் போக்குகள் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
வரலாற்றில் முதன்முறையாக, காசநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான பணிகளுக்கு வழங்கப் படும் நிதியுதவி 2021 ஆம் ஆண்டில் உலகளவில் ஒரு பில்லியன் டாலர்களை எட்டியது.
ஆனால், காசநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான பணிகளுக்கு வழங்கப்படும் இந்த நிதியுதவியானது, 2030 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒரு பெருந் தொற்றாக எண்ணி அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்கை அடையத் தேவையான நிதியின் ஒரு சிறு பகுதியே ஆகும்.
ஒவ்வொரு நாளும் சுமார் 4,400 பேர், சிகிச்சை அளிக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக் கூடிய, காற்றின் மூலம் பரவும் இந்த தொற்று நோயால் தொடர்ந்து இறக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காசநோய் தொடர்பான உயர்மட்டக் குழுவின் சந்திப்பானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான பணிகளுக்கு ஆண்டிற்கு 2 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது.
காசநோய்ப் பரவலை நிறுத்துதல் கூட்டாண்மையின் ‘காசநோய்ப் பரவலை நிறுத்தச் செய்வதற்கான உலகளாவிய திட்டம் (2023–2030) ஆனது, காசநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான பணிகளுக்கான நிதித் தேவை ஆண்டிற்கு 5 பில்லியன் டாலராக உயர்ந்திருப்பதாக மதிப்பிடுகிறது.