TNPSC Thervupettagam

காசநோய் இறப்பிலாத் திட்டம் புதிதாக்கம்

June 1 , 2026 18 days 261 0
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காசநோய் இறப்பிலாத் திட்டம் (TN-KET) தொடங்கப் பட்ட பிறகு, தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் காசநோய் (TB) இறப்பு விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.
  • காசநோய் இறப்பிலாத் திட்டம் (TN-KET) என்பது காசநோய் தொடர்பான இறப்புகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் மாநில அளவிலான மற்றும் மாநிலத்திற்கான பிரத்யேக திட்டமாகும்.
  • தர்மபுரி, கரூர், விழுப்புரம், கன்னியாகுமரி, கடலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதுடன் இங்கு காசநோய் இறப்பு விகிதங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான சரிவைக் காட்டியுள்ளன.
  • இத்திட்டம் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட காசநோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்கு விரிவான மருத்துவ மதிப்பீடு, உள்நோயாளி பராமரிப்பு மற்றும் நீரிழிவு, இரத்த சோகை மற்றும் கல்லீரல் நோய் போன்ற இணை நோய்களுக்கான சிகிச்சையையும் வழங்குகிறது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை - தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (ICMR - NIE) மற்றும் மாநில காசநோய் பிரிவு ஆகியவை இந்த ஆய்வை மேற்கொண்டன.
  • இத்திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம், காசநோய் இறப்புகளில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக ஏறக்குறைய 2.5% குறைவைப் பதிவு செய்துள்ளதுடன் இது முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் மற்றும் சிறப்புச் சிகிச்சையின் செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்