மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர், மான்சுக் மாண்டவியா அவர்கள் காசநோய் ஒழிப்புக் கூட்டிணைவு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அவர் உடனடியாக பதவிப் பொறுப்புகளை ஏற்று 2024 ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் நீடிப்பார்.
2022 ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய நாடுகளின் காசநோய் தொடர்பான இலக்குகளை அடைவதற்காக காசநோய் ஒழிப்புக் கூட்டிணைவு செயலகம், பங்குதாரர்கள் மற்றும் காசநோய் சமூகத்தினர்கள் ஆற்றும் முயற்சிகளை இவர் முன்னின்று வழிநடத்துவார்.
இந்தக் கூட்டிணைவானது, ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக திகழும் காசநோயை அகற்றும் முயற்சியாக 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.